➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx" /> ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx"/>
Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
இறால் நுங்கு குழம்பு
Click & Cook |Era Nungu Curry | Vikatan Samayal
தேவையானவை: இறால் (மிக சிறியது) - ஒரு கப்,
நுங்கு (தோல் சீவிய கொஞ்சம் முத்தின நுங்கு) - இரண்டு,
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
முந்திரி பருப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
கடுகு - 2 சிட்டிகை,
பச்சைமிளகாய் - தேவையான அளவு,
தேங்காய்பால் (இதில் முதலில் எடுத்த திக்கான பால், பின்பு அரைத்து இரண்டாவது தேங்காய்பால், மூன்றாவது அரைத்து மூன்றாவது தேங்காய் பால் என மூன்று தேங்காய் பால் தனி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.)
மசாலாவுக்கு: காஞ்சமிளகாய்,
மிளகு, பட்டை இந்த மூன்றையும் இரவு தண்ணீரில் ஊற வைத்து வடி கட்டி விட்டு அரைத்து திக்காக வைத்துக் கொள்ளவேண்டும்
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட வேண்டும். பின்பு நறுக்கிய வெங்காயம் போட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வருவதற்கு முன் நறுக்கி வைத்த பச்சைமிளகாய் போட வேண்டும். நன்றாக வதங்கிய பின் இறால் போட வேண்டும். இறாலை வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலாவை இரண்டு டீஸ்பூன் போட்டு கொள்ள வேண்டும். நன்றாக வதக்கிய பின் மூன்றாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். அதன் பின் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். (மூன்று பாலையும் மூன்று ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும்). இவை அனைத்தும் ஒன்றாக கொதித்து வர வேண்டும். பின்னர் நுங்கை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். (இறால் அளவு நுங்கையும் சேர்த்து கொள்ள வேண்டும்.) அடுத்து முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். அதன் மேலே முந்திரி பருப்பை போட வேண்டும். .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV